பார்வதி ஷா கொலை வழக்கு: மைத்துனனுக்கு தூக்குத் தண்டனை ரத்து
சென்னை:
பாண்டிச்சேரியில் தனது அண்ணி பார்வதி ஷாவை கற்பழித்துக் கொன்ற மைத்துனன் கமல் ஷாவுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் ரவி ஷா. இவரது மனைவி பார்வதி ஷா. தாயார் பத்மாவதி ஷா மற்றும் தம்பி கமல் ஷா ஆகியோருடன்ரவி ஷாவும், பார்வதி ஷாவும் வசித்து வந்தனர்.
1999ம் ஆண்டு கமல் ஷா, தனது அண்ணி பார்வதி ஷாவை மிருகத்தனமாக கற்பழித்துக் கொலை செய்தார். அவருக்கு தாய் பத்மாவதிஷாவும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டது. பரபரப்பூட்டிய இந்த கொலை வழக்கில் கமல் ஷாவும், பத்மாவதி ஷாவும்கைது செய்யப்பட்டனர்.
பாண்டிச்சேரி ஜூடிசியல் கோர்ட்டில் கமல் ஷாவுக்குத் தூக்குத் தண்டனையும், பத்மாவதி ஷாவுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும்வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இருவரின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெங்கடாச்சலமூர்த்தி மற்றும் நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் செவ்வாய்க்கிழமை தனதுதீர்ப்பை அறிவித்தது. அதில், கமல் ஷாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டும், பத்மாவதிஷாவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை உறுதி செய்யப்பட்டும் தீர்ப்பு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications