த.மா.கா. இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசின் சார்பில்போட்டியிடும் வேட்பாளரின் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில்அ.தி.மு.க.தலைமையிலான அணியில் இடம் பெற்றிருக்கும் த.ம.காவுக்கும்,காங்கிரசுக்கும் 47 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
32 தொகுதிகளில் த.மா.கா சார்பில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலில் 15வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இரண்டாவது பட்டியலில் 11 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
மூன்றாவது இறுதி பட்டியலில் 6 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.இத்துடன் த.மா.கா. சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும்அறிவிக்கப்பட்டுவிட்டன.
மூன்றாவது பட்டியலை த..மா.கா தலைவர் மூப்பனார் வெளியிட்டார்.
தொகுதிகளும், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும்:
குன்னூர் - கந்தசாமி
வில்லிவாக்கம்- டாக்டர் செல்லக்குமார்
புரசைவாக்கம்- பி.வெற்றிவேல்
நன்னிலம் (தனி)- செ.கு. தமிழரசன்
ஆயிரம்விளக்கு- விடியல் சேகர்
தாம்பரம்- சக்கரபாணி ரெட்டியார்
கடலூர்- பி.ஆர்.எஸ்.வெங்கடேசன்