சென்னையில் வாஜ்பாய் 7-ம் தேதி பிரச்சாரம்
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் தமிழகத்தில் மே 7-ம் தேதி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாகஈடுபட்டுள்ளன. முக்கியக் கட்சியான திமுக, பாரதீய ஜனதா மற்றும் பிற கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் வாஜ்பாய் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது பிரதமர் வாஜ்பாய்மே 7-ம் தேதி தமிழகத்தில் நடக்கும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன், வாஜ்பாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சென்னை மெரீனா கடற்கரையில்,7-ம் தேதி நடக்கும் தேசிய ஜனநாயக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாஜ்பாய் பேசுவார். இதில் திமுக உள்ளிட்டதேசிய ஜனநாயக முன்னணிக் கட்சிகள் கலந்து கொள்கின்றன.












Click it and Unblock the Notifications