அமெரிக்காவில் பிரபலமாகும் யோகா
வாஷிங்டன்:
இந்தியாவின் பழமை வாயந்த யோகா பயிற்சிமுறை தற்போது அமெரிக்காவில் மிகவும்பிரபலமடைந்து வருகிறது.
யோகா என்றழைப்படும் யோகசான பயிற்சி முறை இந்தியாவில் உருவானது. மிகவும்தொன்மையானது. 5,000 ஆண்டு காலத்திற்கு முன் உருவானது யோகா. இது தற்போதுஅமெரிக்காவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
ஹாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அமெரிக்க நீதிமன்ற நீதிபதிகள்போன்றோரை யோகா கவர்ந்திழுத்து வருகிறது.
இது குறித்து டைம் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியில், 5 ஆண்டுகளுக்குமுன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு மக்கள் தங்கள் உடலை ஆரோக்கியத்துடன்வைத்துக் கொள்ள யோகாவை நாடுகிறார்கள். சுமார் 15 மில்லியன் அமெரிக்க மக்கள்தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஏதாவது ஒரு வகையில் யோகா பயிற்சியில்ஈடுபடுகிறார்கள்.
பிரபலமான கலைஞர்கள் பலரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில்,மடோனா, ஜுலியா (ராபர்ட்ஸ்), மெக் (ரியான்), ரிக்கி (மார்ட்டின்), மிச்சில்(ஃபைஃபெர்). குவ்நெக்(பால்ட்ரோ) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் எனகூறியுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் கிளப்புகளில் 75 சதவீத கிளப்புகள் யோகா வகுப்புகளைநடத்துகின்றன.
இங்கு நடத்தப்படும் வகுப்புகள் குறித்து மாடல் கிறிஸ்டி டுர்லிங்டன் கூறுகையில்,எனது சில நண்பர்கள் யோகா பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்இருந்தார்கள். வேறு சிலர் தங்கள் உடல் உபாதைகளை குறைக்க யோகா உதவும் என்றஎண்ணத்தில் வந்தனர். இப்போது யோகா தங்களை நல்ல ஆரோக்கியத்துடன்வைத்திருக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள் என்றார்.
புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளர் ஓப்ரா வின்ஃபிரே இந்த மாதஆரம்பத்தில் நடத்திய நிகழ்ச்சி முழுவதையும் யோகாவினால் ஏற்படும் நன்மைகள்குறித்து விளக்குவதற்காக ஒதுக்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டர்லிங்டன் மற்றும் யோகா குருராட்னியும் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications