களை இழந்த மெரீனா சீரணி அரங்கம்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம் மேடை தற்போது கவனிப்பார் இன்றி சோர்ந்து கிடக்கிறது.
புரட்சிக் கவிஞர் பாரதியார், மகாத்மா காந்தி ஆகியோர் இந்த மேடை இருக்கும் இடத்திலிருந்துதான் விடுதலை முழக்கமிட்டார்கள்.
விடுதலைக்குப் பின்னரும்கூட ஏராளமான கூட்டங்கள் இங்கு நடந்திருக்கின்றன. ஆனால் எல்லாமே தற்காலிக மேடைகள்தான்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாகிய எம்.ஜி.ஆர்., தற்போதைய முதல்வர் கருணாநிதி உள்பட பல அரசியல் தலைவர்கள் இந்தமேடையின் அழகுக்கு அழகு சேர்த்துள்ளனர்.
பல தலைவர்கள், பல அரசியல் நிகழ்வுகள், மதக் கூட்டங்களைப் பார்த்துள்ளது இந்த அரங்கம். தெரியாத்தனமாய் யாராவது மதியவெயிலில் பீச் பக்கம் போய் விட்டால் அவர்களுக்கு நிழல் தருவது இந்த மேடை தான்.
இந்த மேடையில் மாலையில் தொடங்கி விடியவிடிய பல கூட்டங்கள் நடந்துள்ளன.
சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தன் லோக் ஜன சக்தியின் தமிழகப் பிரிவை இந்த மேடையில் இருந்துதான்துவக்கினார்.
மக்கள் தமிழ் தேசம், பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகளும் இங்கு பல கூட்டங்களை நடத்தி இருக்கின்றன.
ஆனால் இந்த மேடையை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. தற்போது பேரணிநடத்துவதற்குக் கூட இந்த மேடையை எநத்வொரு அரசியல் கட்சியும் பயன்படுத்துவதில்லை.
ஏராளமான குப்பைக் கூளங்கள்தான் இப்போது இம்மேடையின் காட்சிப் பொருள்களாக உள்ளன.
1969-ல் பேரறிஞர் அண்ணாவின் 60ஆம் பிறந்த நாளையொட்டி எழுப்பப்பட்ட இந்தக் காங்க்ரீட் மேடை, பல அரசியல் கட்சிகளின்பிறப்பிடமாகும்.
பல கட்சிகளின் கூட்டங்களையும், ஏராளமான அரசியல் தலைவர்களையும் கண்டு சலித்து, அவர்கள் சொன்ன கடல் காற்றில்பறக்கவிட்ட வாக்குறுதிகளையும் பார்த்து, கேட்டு களைத்துப்போய்தான் இந்த மேடை களை இழந்து விட்டதோ?
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications