ஸ்டாலின் ஏன் முதல்வராகக் கூடாது?: வெங்கையா நாயுடு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத ராஜீவ்காந்தியே பிரதமரான போது, 25ஆண்டு அரசியல் அனுபவமுள்ள மு.க. ஸ்டாலின் முதல்வராகக் கூடாதா என்றுபாஜகவின் தேசியப் பொதுச் செயலாளரும் மத்திய அமைச்சருமான வெங்கையநாயுடு கேள்வி எழுப்பினார்.
பெங்களூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஸ்டாலின் ஏன் முதல்வராக ஆகக் கூடாது என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார். அதுஉண்மைதான். அரசியல் அனுபவம் ஏதும் இன்றி பைலட்டாக இருந்த ராஜீவ் காந்திநாட்டின் பிரதமராக இருந்தார்.
அப்படியானால், மேயர் மற்றும் எம்.எல்.ஏ.வாகி 25 ஆண்டு கால அரசியல் அனுபவம்பெற்றுள்ள ஸ்டாலின் முதல்வராகக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications