மத்தியில் வாஜ்பாய் -- - மாநிலத்தில் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

கோவை:

திருமணம் நடக்காமல், குழந்தை பிறக்குமா? தேர்தலில் போட்டியிட முடியாமலே முதல்வர் ஆவது எப்படி என வெங்கய்யா நாயுடுகேள்வி எழுப்பினார்.

கோவை மேற்குத் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெங்கய்யா நாயுடு பேசியதாவது:

தமிழகத்தில் இந்த தேர்லில் நடக்கும் போட்டி தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே போட்டி. நம்பிக்கைக்கும்அவநம்பிக்கைக்கும், நல்ல அரசுக்கும், கெட்ட அரசுக்கும் இடையே நடக்கும் போட்டி. தலைவருக்கும், எழுதி வைத்துப்படிப்பவருக்கும் (லீடருக்கும் மூடருக்கும் இடையே) நிலவும் போட்டி.

எதிரணியைப் பாருங்கள், அதிமுகவுக்கு காங்கிரசைப் பிடிக்காது. காங்கிரசுக்கு பாட்டளி மக்கள் கட்சியைப் பிடிக்காது. பாட்டாளிமக்கள் கட்சிக்கு காங்கிரசைப் பிடிக்காது. இந்திய கம்யூனிஸ்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைப் பிடிக்காது, பாட்டளி மக்கள்கட்சிக்கும் தமிழ் மாநில காங்கிரசைப் பிடிக்காது. காங்கிரசுக்கு ஜெயலலிதா பிரசாரம் செய்ய மாட்டார். அதிமுக விற்கு சோனியாபிரசாரம் செய்யமாட்டார்.

சென்னையில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி. பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் காட்சிக்கும் காங்கிரசும் எதிரணி. அதிமுகவும்காங்கிரசும் புதுவையில் எதிர்த்துப் போட்டி. கோவையில் கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் வாழ்க என்கின்றனர். பாலக்காட்டில்கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் ஒழிக என்கின்றனர்.

அந்தக் கூட்டணியைப் பாருங்கள், காங்கிரஸ், லல்லு கட்சி, அதிமுக என ஊழல் கட்சிகளின் அற்புதக் கூட்டணியாக இருக்கிறது.இவர்களுக்கு இரண்டு அம்ச திட்டம் மட்டுமே உள்ளது. ஒன்று ஜெயில், மற்றொன்று பெயில்.

தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் வேட்பு மனுத் தள்ளுபடியானாலும், கூட நான் தான் முதல்வர் எனக் கூறி வருகிறார்ஜெயலலிதா. திருமணமே செய்யாமல் குழந்தை பிறக்குமா?

ஆனால், இந்த அணியில் நாட்டின் நலனைைக் கட்டிக் காத்து சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட தலைவர்கள் உள்ளனர். மத்தியில்வாஜ்பாய், மாநிலத்தில் கருணாநிதி. இவர்களுக்கு நல்லாட்சி தருவது மட்டுமே குறிக்கோள்.

வாஜ்பாய் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. முஸ்லிம் நாடுகள் அனைத்தும் நமக்கு ஆதரவாகசெயல்படுகிறது. இந்தியாவின் நூற்றாண்டு இந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டில் வல்லரசு நாடாக மத்தியில் பாரதிய ஜனதாக் கட்சியின்ஆட்சி தொடரவும், அதற்கு உறுதுணையாக மாநிலத்தில் திமுக ஆட்சி தொடரவும் வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார்வெங்கய்யா நாயுடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+