தேர்தல் கமிஷன் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜெ.
கோவை:
தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் எனது மனுக்களைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தேர்தல் கமிஷன் மீது சட்டப்படியானநடவடிக்கை மேற்கொள்வேன் என கோவையில் ஜெயலலிதா தெரிவித்தார்.
கோவையிலிருந்து சனிக்கிழமை மதியம் பிரசாரத்திற்குப் புறப்பட்டபோது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா அளித்தபதில்கள் வருமாறு:
கேரள அமைச்சர் பாலகிருஷ்ணனின் மனு ஏற்கப்பட்டு எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில்மேற்கொண்ட அணுகுமுறை தவறானது.
நீதிமன்றத் தீர்ப்பில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது என்பதற்கு வரைமுறை உண்டு. எனது வேட்பு மனு தள்ளுபடியனது குறித்து நான்சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.
ரஜினி, மற்றும் சந்தனவீரப்பன் பேச்சுக்கள் தேர்தல் பிரசாரத்தில் இடம் பெறவில்லையே என நிருபர்கள் கேட்டபோது,உருப்படியான கேள்விகளைக் கேளுங்கள். அபத்தமான கேள்விகளுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.
சங்கரமடத்தையும், திமுகவையும் ஸ்டாலின் ஒப்பிட்டுக் கூறியுள்ளரே எனக் கேட்டபோது, பதில் சொல்ல விரும்பவில்லை எனக் கூறிவிட்டு பிரசாரத்திற்கு கிளம்பினார் ஜெ.












Click it and Unblock the Notifications