கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி
தர்மபுரி:
சந்தேகப்பட்டு கொலை செய்ய முயன்ற கணவனின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தாள் மனைவி.
தர்மபுரி மாவட்டம், நல்லப்ப நாயக்கனூரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (45). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது முதல்மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது இரண்டாவது மனைவி புனிதா ((26). இவர்களுக்கு சதிஷ்குமார், சவுந்தர்யாஎன்ற இரண்டு பேர் உள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. பிற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக புனிதா மீது புகார்கூறி திட்டி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு ஜெயவேலு குடித்து வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டில் மனைவியைத் திட்டி விட்டு படுத்து, தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து விழித்த ஜெயவேலு, புனிதாவைக் கத்தியால் கொலைசெய்ய முயன்றுள்ளார். இதை அறிந்த புனிதா, அதிலிருந்து தப்பியுள்ளார். பினனர் அங்கிருந்து தப்பிச் சென்று பக்கத்து வீட்டில் பதுங்கிக்கொண்டார்.
தன் மீது சந்தேகப்பட்டது மட்டுமின்றி, கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனைப் பழி தீர்க்க முடிவு செய்தார். சிறிது நேரத்தில்வீடு திரும்பிய புனிதா, தனது கணவன் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அப்போது அங்கு அருகில் இருந்த கல்லை எடுத்து கணவனின்தலையில் போட்டார்.
இதில் ஜெயவேலு அதே இடத்தில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications