வாக்குகளை பிரிக்க உருவாக்கப்பட்டது மதிமுக: கருணாநிதி
கோவை:
வாக்குகளைப் பிரிக்க உருவாக்கப்பட்டது தான் மதிமுக என்ற அணி என முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் கருணாநிதி, மேட்டுப்பாளையம், துடியலூர், சிங்காநல்லூர்,கோவை மேற்கு ஆகிய தொகுதிகளில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். கோவை மேற்குத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
அரசியல் கட்சிகள், பிரசாரக் கூட்டத்தில் தங்களது கொள்கைகள், கோட்பாடுகளை எடுத்துரைப்பர். அது தான் முக்கிய இடம்வகிக்கும். ஆனால், தேர்தல் மனுவை தள்ளுபடி ஆகுமா, ஆகாதா என்பதுவே இப்போது முக்கியப் பிரச்சனையாகி வருகிறது.தேர்தல் கமிஷனின் உத்தரவை நான் இட்ட உத்தரவாக எண்ணுகின்றனர். தேர்தல் ஆணையத்திடம் நானா அம்மாவின் மனுக்களைத்தள்ளுபடி செய்யச் சொன்னேன்? இதற்கு மூலகாரணம் என்ன?
டான்சி நிலத்தை வாங்கியதுதான். பதவியில் இருப்பவர்கள் அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே.அப்படியிருந்தும் அரசு சொத்தை ஏன் வாங்கினார். என்னிடம் கேட்டு வாங்கினாரா? நானா வாங்கச் சொன்னேன். என்னிடம்கேட்டிருந்தால் கூட நான் சொல்லியிருப்பேன், அரசு சொத்தை வாங்கக் கூடாதம்மா, அது தவறு எனக் கூறியிருப்பேன். எதிரியாகஇருந்தாலும் நான் தவறாகச் சொல்லியிருக்க மாட்டேன்.
தமிழகத்தில் இரண்டு அணிகள் தான். இந்த அணியை விடுத்து வாக்குகளைப் பிரிக்க மதிமுக என்ற அணியும் உள்ளது.
இந்த ஆட்சியை மதவாத ஆட்சி என்று சொல்கிறார்கள். கடந்த 99ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளியிட்டுள்ளஅறிக்கையில், மதச்சார்பின்மை பற்றி தெளிவாக் கூறியுள்ளோம். சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்படும் என்பது தான் அது.இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஈரான் பார்லி மென்டில் உரையாற்றிய வாஜ்பாய், இந்திய அரசு சிறுபான்மையினரின் நலனைப பாதுகாக்கும் அரசு. மதச்சார்பற்றஅரசு என்பதை தெளிவுபட வலியுறுத்தியுள்ளதை பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன.
சாதிக் கட்சிகளை நான் சேர்த்துக் கொண்டதாகச் சொல்கின்றனர். எங்கள் அணியில் இரண்டு இயக்கங்கள் உள்ளன. கிருஷ்ணசாமிதலைமையிலான அணி. திருமாளவன் தலைமையில் ஒரு அணி. இவர்களை ஒற்றுமைப்படுத்தியதன் மூலம் சமூக நலனில் சுமூக உறவுஏற்பட்டுள்ளது. எந்த விதத்திலும் இது எதிரானதாக இல்லை. சமூக ஒற்றுமைதான் ஏற்படும். சாதிகளை மாற்ற வேண்டும்என்ற நோக்கத்தில் தான் இதில் சாதிக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications