கருணாநிதியின் குடும்ப ஊழலை அம்பலப்படுத்துவேன்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

கருணாநிதியின் குடும்ப ஊழலை தினம் ஒன்றாக வெளியிட்டு அம்பலப்படுத்துவேன் என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அதிமுக அணித் தலைவர் ஜெயலலிதா ஈரோட்டில் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:

சிமெண்ட் உற்பத்தித் தொழில் கருணாநிதியின் குடும்பமே ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் சிமெண்ட்விலை உயர்வுக்கு கருணாநிதியின் குடும்ப தொழிற்சாலைகள் தான் காரணம்.

சங்ககிரி, தாழையூத்து ஆகிய இடங்களில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகள் கருணாநிதியின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.தமிழ்நாட்டில் மட்டும் தான் மட்டும் தான் சிமெண்ட் விலை அநியாயமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கொடுமையை கடந்த 99ம்ஆண்டு நடந்த தேர்தலின்போதே அம்பலப்படுத்தினேன்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் சாலைகள் அமைக்கவும், மேம்பாலங்கள் கட்டவும் கருணாநிதியின் குடும்பத்தொழிற்சாலையில் தயாரான சிமெண்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

இனி, கருணாநிதி குடும்பம் ஈடுபட்ட ஊழலில் தினம் ஒன்றை வெளியிடுவேன். அவரது அக்கிரமத்தையும் நாட்டு மக்களுக்குவெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+