தீக்குளித்த தொண்டர் குடும்பத்துக்கு ஒரு லட்சம்
ஈரோடு:
தீக்குளித்து பலியான அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்ட செய்தியைக் கேட்ட வட ஆர்க்காடு மாவட்டத்தில் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் தீக்குளித்ததொண்டர் கழக உடன்பிறப்பு சகோதரர் ஏகாம்பரம் சிகிச்சை பலனின்றி இறந்தார் எனக் கேள்விப்பட்டேன்.
மக்கள் விருப்பத்தை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது. சட்ட விதிமுறைகளையும் மக்களுக்குத் தான். மக்கள் விருப்பத்திற்குமாறாக நினைப்பவர்கள் எப்படி வந்தாலும் என்ன சூழ்ச்சி செய்தாலும் மண்ணைத்தான் கவ்வுவார்கள்.
எனவே எனது கழக உடன் பிறப்புகள் யாரும் எந்த சூழ்நிலையிலும் தீக்குளித்தல் போன்ற என்னை வருந்தச் செய்யும் செயல்பாடுகளில்ஈடுபடக் கூடாது என மிகுந்த கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
குடும்பத் தலைவரை இழந்து வாடும் ஏகாம்பரத்தின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி அளிக்கிறேன் என்று தனது அறிக்கையில்கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications