பிரசாரத்தை துவக்குகிறார் மூப்பனார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் திங்கள்கிழமை சென்னையில்துவக்குகிறார்.

சட்டசபைத் தேர்தல் களத்தில் இன்னும் தீவிரமாக குதிக்காத ஒரே கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும்தான்.அக்கட்சியின் தலைவர் மூப்பனார் உடல் நலம் குன்றிய நிலையில் இருப்பதால் கட்சியில் இன்னும் தேர்தல்களைகட்டவில்லை.

இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து சனிக்கிழமை மூப்பனார் வீடு திரும்பினார்.ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,சென்னையிலிருந்து எனது தேர்தல் பிரசாரத்தை திங்கள்கிழமை துவக்குகிறேன்.

தாம்பரம், ஆலந்தூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னை தொகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம்செய்கிறேன். அதன் பின்னர் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செல்கிறேன்.

இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் கூட்டணியின் வெற்றிக்குப்பாதிப்பில்லை. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட முடியாமல் செய்து விட்டதால், அவருக்குப்பதில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியினரே முடிவு செய்வார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பல தொகுதிகள் எங்களுக்கு மீண்டும் கிடைக்காமல்போனதால் எனக்கும் வருத்தம்தான். ஆனால் இது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் நடக்கவில்லை. மற்றகட்சிகளிலும் நடந்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் அமைப்பைத் துவக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்ப.சிதம்பரம், மீண்டும் எங்களுடன் இணைய முன்வந்தால் வரவேற்போம். அவரை சேர்த்துக் கொள்வோம் என்றார்அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+