இலங்கையில் கடும் சண்டை: 375 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் யானையிறவு பகுதியில் முப்படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் இதுவரை 300ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இச்சண்டையில் 75 புலிகளும் உயிரிழந்துள்ளனர்.

860 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் புலிகள் அறிவித்திருந்த ஒரு தரப்பு சண்டை நிறுத்தம் கடந்த 24 ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் ராணுவவீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

அதே நேரம் இலங்கையில் உள்ள முப்படை வீரர்களும், கடந்த வருடம் புலிகளிடம் இழந்த யானையிறவு பகுதியை மீட்கும் முயற்சியில்புலிகளுடன் நேருக்குநேராக மோதினர்.

பல்லாய் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக இருதரப்பினருக்கும்இடையே நடந்து வரும் தொடர் சண்டையில் இதுவரை 300 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இறந்த ராணுவ வீரர்களில் 30 பேரின் உடல்களை புலிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இச்சண்டையில் 75 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டனர்.

ஆனால் ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், பல்லாயில் நடந்த சண்டையில் புலிகள் தரப்பில் 400 க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என்றும், 2,600 க்கும் மேற்பட்ட புலிகள் காயமடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

புலிகளை நோக்கி கடும் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களை, புலிகள் கனரக பீரங்கிகள் மற்றும் சிறு பீரங்கிகளைக் கொண்டுபதிலடி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+