For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் மு.க.ஸ்டாலின் பராக்! பராக்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Stalinமு.க.ஸ்டாலின் முதல்வராவதற்கு களம் ரெடியாகி வருகிறது.

புலி வருகிறது, புலி வருகிறது என்று சொல்லி, சொல்லி தற்போது புலி வந்தே விட்டது. ஸ்டாலின் முதல்வராகப் போகிறார் என்றுதேர்தலுக்கு முன்பே பேச்சு அடிபட்டது. அதற்காகவே இந்தத் தேர்தலில் ஸ்டாலின் யோசனைப்படியே தேர்தல் கூட்டணிகளும்,வேட்பாளர் தேர்வும் அமைந்தது என கூறப்பட்டது.

அதை நிரூபிக்கும் வகையில், ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு இருந்தால் எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது என்று திமுகதலைவரும், ஸ்டாலினின் தந்தையுமான முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இளம் வயதிலிருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டவர் மு.க.ஸ்டாலின். இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி சட்டம் அமலுக்குவந்தபோது, தந்தையுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டவர். கட்சியின் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைவாசம்அனுபவித்தவர். தந்தை என்ற நிலையை விட தலைவர் என்ற நிலையிலேயே கருணாநிதியை அதிகம் பார்த்தவர், பழகியவர் ஸ்டாலின்.

இந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலினின் விருப்பப்படியே அனைத்து நடவடிக்கைகளும் நடந்துள்ளன. ஸ்டாலினுக்குப் பிடிக்காத கட்சிகள்,வேட்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டனர்.

மக்கள் தமிழ் தேசம், புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றை திமுக கூட்டணியில் சேர்க்க ஸ்டாலின்மேற்கொண்ட முயற்சிகளே காரணம். மதிமுக வெளியேறியதிலும் ஸ்டாலினுக்குப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

ஸ்டாலினின் போக்கு பிடிக்காத காரணத்தினால்தான் முரசொலி மாறன் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் என்றும்பேசப்படுகிறது.

ஸ்டாலினை மையமாக வைத்து இத்தனை காரியங்களும் நடக்கக் காரணம், அவர் முதல்வராவதற்கு வசதியாக அனைத்துமுன்னேற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஸ்டாலின் எடுக்கும் முடிவுகள் எப்படி இருக்கிறது என்பதைஇந்தத் தேர்தல் மூலம் பரிசோதித்துப் பார்க்க கருணாநிதி முடிவு செய்துள்ளார். ஒருவேளை ஸ்டாலின் எடுத்துள்ள முடிவுகள் சரியாக இருந்து,கிளிக் ஆகி விட்டால் அவரிடம் முதல்வர் பதவியை ஒப்படைக்க கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

முதல்வர் பதவிக்கான வெள்ளோட்டமாகவே தேர்தல் முடிவுகள் எடுப்பதை ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் முதல்வர். அதில் அவர்பாஸ் செய்து விட்டால் அடுத்து பிரமோஷன்தான்.

ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்பதை மறைமுகமாக ஒவ்வொரு கூட்டத்திலும் கூறத் தொடங்கி விட்டார் கருணாநிதி. அவர்முதல்வராகும் வாய்ப்பு இருந்தால், அதை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக வட்டாரத்தில்இது பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது. இருப்பினும், ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்ற எண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்பேபரவி விட்டதால், திமுகவினர் இதை சந்தோஷமாகவே வரவேற்கின்றனர்.

கருணாநிதியின் கருத்துக்கு பாரதீய ஜனதாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன்சென்னையில் அளித்த பேட்டியில், ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு வரக் கூடிய அனைத்துத் தகுதிகளும் பெற்றவர் என்று கூறியுள்ளார்.இதன் மூலம் ஸ்டாலினை முதல்வராக்க பா.ஜ.க. ஒப்புதல் அளித்துள்ளதாகவே கருத வேண்டும்.

ராஜபாட்டை தயாராக உள்ளது. பரிவாரங்கள், பல்லக்குகள், பல்லக்குத் தூக்கிகள் என எல்லாமே தயார் நிலையில் உள்ளது.மன்னர் மட்டுமே வர வேண்டும். அவரும் வரப் போகிறார் என்று கட்டியம் கூறத் தொடங்கியாகி விட்டது. மன்னரில்மாற்றம் வருமா என்பதை மே 10-ம் தேதிக்குப் பிறகு பார்க்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X