வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை: த.மா.கா. தேர்தல் வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை, கூட்டுறவு கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்தல் உள்பட பல வாக்குறுதிகள் தமாகாவெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

த.மா.கா. தேர்தல் வாக்குறுதிகள்:

1. வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.

2. குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி.

3. கிராமங்களையும், நகரங்களையும் இணைக்கும் வகையில் கம்யூட்டர் கல்வியை ஊக்குவிப்போம்.

4. அனைத்து சமூகமக்களும் நல்லிணக்கத்துடன் வாழ வழி செய்வோம்.

5. பாலிதீன் பைகளுக்குத் தடை

6. வேலைவாய்ப்புக்களைப் பெருக்குவோம்.

7. அனைவருக்கும் தரமான, இலவச மருத்துவ வசதியை அளிப்போம்.

8. தனியார் நிதிநிறுவனங்களில் பணத்தைக் கொடுத்து ஏமாந்த பொதுமக்களுக்கு பணத்தைத் திரும்பப் பெற வழிவகுப்போம்.

9. ஆண்கள் மற்றும் பெண்களின் சமூக நீதிக்காகப் போராடுவோம்.

10. பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்துவோம்.

11. காவிரி நீர் தமிழகத்துக்குக் கிடைக்க வழிவகை செய்வோம்.

12. சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ள கோவில்சொத்துக்களை மீட்போம்.

13. நீதித்துறை யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வழிவகுப்போம்.

14. நெசவாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்.

15. பரம்பிகுளம், ஆளியாறு பாசனத் திட்ட ஒப்பந்தத்தை உடனடியாகப் புதுப்பிக்க நடவடிக்கை எடுப்போம்.

16. தமிழ்மொழியை செம்மொழியாக அறிவிக்க முயற்சிப்போம்.

17. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உதவி புரிவோம்.

18 பாண்டியாறு, புன்னம்புழா, அச்சன்கோவில், பம்பா நதிநீர் திட்டங்கள் கொண்டு வர முயற்சிப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+