வரதட்சணை கொடுமை: மனைவியை கொன்ற டிவி நடிகர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தனது மனைவியைக் கொலை செய்த டிவி நடிகரைப் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை கொரட்டூர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் டி.வளர்மதி. வயது 26. வளர்மதிக்கும் சென்னை நுங்கம்பாக்கம் காமராஜர்புரம்முதல் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்திக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

ராமமூர்த்தி பி.ஏ.படித்தவர். இவர் சன் டிவியில் மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற நாடகத்திலும், போலீஸ் டைரி படத்திலும் நடித்து வருகிறார்.

இவருக்குத் திருமணம் நடந்த போது வளர்மதியின் பெற்றோர் 30 பவுன் நகைகள் கொடுத்தனர். திருமணத்துக்கான செலவையும்அவர்களே ஏற்றுக் கொண்டனர்.

வளர்மதியும், ராமமூர்த்தியும் திருமணமான முதல் 3 மாதங்கள் சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினர். அதன் பிறகு ராமமூர்த்தியும்,அவரது தாயும் சேர்ந்து வளர்மதியை வரதட்சணை வாங்கி வரச் சொல்லிக் கொடுமைப்படுத்தினார்கள்.

இதையடுத்து, வளர்மதி தன் வீட்டுக்குச் சென்று ரூ 10,000 வரதட்சணை வாங்கி வந்து கொடுத்தார். அதற்குப்பிறகும் அவர்கள்,வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.

இதற்கிடையே சம்பவத்தன்று தன் வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த வளர்மதி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வளர்மதியின் தந்தை, தன் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி ராமமூர்த்தி வீட்டார் தான் கொலை செய்திருக்க வேண்டும்என்று போலீசில் புகார் கொடுத்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், வளர்மதியை யாரோ காலால் உதைத்ததால் அவரது சிறுநீரகம் பாதிப்படைந்து அவர் இறந்துவிட்டார் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் டிவி நடிகர் ராமமூர்த்தியைக் கைது செய்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் சரண்யாஎன்ற குழந்தையும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+