மகனுக்கு மகுடம் சூட்ட இது மன்னராட்சி அல்ல: வைகோ
திருச்செங்கோடு:
மகனுக்கு மகுடம் சூட்ட இது ஒன்றும் மன்னராட்சி அல்ல என திருச்செங்கோட்டில் வைகோ பேசினார்.
திருச்செங்கோட்டில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பேசியதாவது:
ஜனநாயகத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள் இன்றைய மக்கள் தான். உலக நாடுகளில் ஜனநாயகம் தழைத் தோங்கியிருப்பதுஇந்தியாவில் தான். ஆனால், இந்த ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய குறைபாடு உள்ளது.
இந்த குறைபாடு, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்வதில்லை என்பது தான். வெறுப்பும்சலிப்பும் கொண்டு இவர்கள் வாக்களிப்பதில்லை. நீதிபதிகளே தீர்ப்பு எழுதா விட்டால் எப்படி? ஆகவே வாக்களார்கள் தவறாதுசென்று வாக்களிக்க வேண்டும். அந்தக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. மன்னராட்சி இங்கு நடக்கவில்லை. மன்னராட்சி நடந்தால் மகனுக்கு மகுடம்சூட்டிக் கொள்ளலாம். ஆனால், இது ஜனநாயக ஆட்சியாயிற்றே.
அதிமுகவை நான் எதிர்த்துப் பேசவில்லை என்று சொல்கிறார்கள். அதிமுகவை எதிர்த்து 1200 கிலோ மீட்டர் நடைப்பயணம்மேற்கொண்டு, ஊழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியவன் நான். இதனால் பயனடைந்தது திமுக.
இது தான் கடைசித் தேர்தல் எனக் கூறுகிறார் கருணாநிதி. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும், பெரியாரைப் போல நீண்ட நாட்கள்வாழ்ந்து தமிழுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications