மே 7 ல் வாஜ்பாய் தமிழகத்தில் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தமிழகத்தில் மே 7 ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதே நாள் சென்னையில் நடக்கும் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக தேர்தல் கூட்டத்திலும் சிறப்புரையாற்றுவார்.
மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்தல் பேரணிகளில் சிறப்புரையாற்றும் பிரதமர் வாஜ்பாயின் தேர்தல்சுற்றுப்பயணம் வரும் 8 ம் தேதியுடன் முடிவடைகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஞாயிற்றுக்கிழமை அசாமில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அவர் சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ள மேற்கு வங்கம், அசாம், கேரளா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்திலும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications