தி.மு.கவை தோற்கடிப்பேன்: அழகிரி சபதம்
மதுரை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் சட்டசபை சபாநாயகர் பழனிவேல் ராஜனை தோல்வியுறச் செய்வதே தன்லட்சியம். தி.மு.கவுக்கு எதிராக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிப்பேன் என தமிழக முதல்வரும்,தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அழகிரி தனது ஆதரவாளர்களையும், அழகிரி எழுச்சி பேரவைநிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்.
ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், கரிமேடு, மணிநகரம், அருள்தாஸ்புரம், தத்தனேரி, செல்லூர்,கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு அழகிரி சென்ற போது அவரது ஆதரவாளர்கள் அவருக்கு மாலை,சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சபாநாயகரை எதிர்த்து நான் பிரசாரம் செய்ய வேண்டியஅவசியமே இல்லை. அவர் தானாகவே தோற்று விடுவார்.
எனது ஆதரவாளர் தங்கம் தென்னரசுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரசாரம் செய்யவில்லை. தென்னரசுவுககுஸ்டாலினின் ஆதரவு தேவையில்லை. அவர் தானாகவே வெற்றி பெறுவார்.
அழகிரி எழுச்சி பேரவை சார்பாக பலர் போட்டியிடுகின்றனர். தி.மு.க.வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும்சுயேட்சை வேட்பாளர்களை பேரவை ஆதரிக்கும்.
போடி தொகுதியில் சுருளி, தேனி தொகுதியில் பிச்சை, கடலாடி தொகுதியில் பிரணவநாதன் ஆகியோர் பேரவைசார்பில் போட்டியிடுகின்றனர்.
நத்தம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பி.ராமன், திண்டுக்கல்லில் போட்டியிடும் மணிமாறன், மேலூரில்போட்டியிடும் ராஜமாணிக்கம், சோழவந்தானில் போட்டியிடும் துரைச்சாமி, திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும்சூடாமணி ஆகியோருக்கு பேரவை ஆதரவு அளிக்கிறது.
பேரவையின் வளர்ச்சி அமோகமாக உள்ளது. தென்மாவட்டம் முழுவதும் பேரவை துவக்கப்பட்டு வருகிறது.விரைவில் தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் வளர்ச்சி பெறும் என்றார்.
பழனிவேல் ராஜனுக்கு எதிராக செயல்படுவது கழகத்தை பாதிக்காதா என நிருபர்கள் கேட்டபோது, நான்கழகத்திலேயே இல்லை என்னும் போது பழனிவேல் ராஜனுக்கு எதிராக செயல்படுவது எப்படி கழகத்தை பாதிக்கும்.நீங்கள் எந்த கழகத்தை கேட்கிறீர்கள் என பதில் கேள்வி எழுப்பினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications