புலிகளுடன் சண்டை: இலங்கை ராணுவத்துக்கு கடும் சேதம்
கொழும்பு:
இலங்கையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து நடந்த சண்டையில், ராணுவத்துக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்துவிசாரணை நடத்தும்படி, இலங்கைப் பத்திரிக்கைகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், விடுதலைப்புலிகள் கடந்தடிசம்பர் மாதம் 24 ம் தேதி ஒரு தரப்பு சண்டை நிறுத்தம் அறிவித்திருந்தனர்.
இதற்கு இலங்கை அரசு பதில் எதுவும் கூறாமல், தொடர்ந்து மெளனம் சாதித்து வந்த காரணத்தால் அவர்கள் 4 முறைநீட்டித்த சண்டை நிறுத்தத்தை கடந்த ஏப்ரல் 24 ம் தேதி வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து ராணுவவீரர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையே நடந்த கடும் சண்டையில், ராணுவ வீரர்கள் 213 பேர் உயிரிழந்தனர். புலிகள்தரப்பில் 75 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் சேர்த்து ஆயிரக்கணக்கானோர்படுகாயமடைந்தனர்.
புலிகள் நடத்திய கனரக பீரங்கிகள் மற்றும் ஆர்ட்டிலரி வெடிகுண்டு தாக்குதலால் யாழ்ப்பாணம் பகுதியை விட்டேராணுவ வீரர்கள் தப்பியோடினர்.
இலங்கையில் அமைதி ஏற்பட முயற்சித்து வரும் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் பிபிசிதொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், புலிகள் அறிவித்திருந்த சண்டை நிறுத்தத்திற்கு இலங்கைஅரசு பதில் செவிசாய்க்காமல் இருந்தது துர்திர்ஷ்டவசமானது. இது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பட்டமுட்டுக்கட்டையாகும் என்றார்.
இலங்கையில், வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தியில், புலிகளிடமிருந்து யானையிறவுபகுதியை மீட்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள், ஆபரேஷன் அக்னி கீலியா என்ற தாக்குதல் நடத்தினர்.
ஆனால் இந்தத் தாக்குதல் படுதோல்வி அடைந்தது. இதற்கான காரணம் குறித்தும், ராணுவத்துக்கு ஏற்பட்ட சேதம்குறித்தும் இலங்கை அரசு, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இலங்கை ராணுவத்துக்கு இதே போல்எதிர்காலத்தில் சேதம் ஏற்படக் கூடாது.
ஒரு தரப்பு சண்டை நிறுத்தம் அறிவித்து, அதற்கு அரசு எவ்வித பதிலும் கூறாத நிலையில், அதை வாபஸ் பெற்றுதங்களது நிலையை வலுப்படுத்திக் கொண்டு கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் புலிகள்.
யானையிறவு அருகில் உள்ள பல்லாய் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், புலிகளுக்கும் இடையே நடந்ததாக்குதலில் ராணுவத்துக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலால் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை எதுவும் ஏற்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இன்னொரு பத்திரிக்கை செய்தி தெரிவிக்கையில், சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்று கடும் தாக்குதல் நடத்தியபுலிகளுடன், இலங்கை அரசு விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்.
இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளது. மேலும் இனப்பிரச்சனையை சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்து வைக்க முடியும்என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் கூறுகையில், நான் இலங்கையிலேயே தங்கி,விடுதலைப்புலிகளிடமும், இலங்கை அரசிடமும் தனித்தனியே பேசி அவர்களை அமைதிப் பேச்சுவார்த்தையைவிரைவில் தொடங்குமாறு வலியுறுத்துவேன் என்று பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications