பாண்டிச்சேரி நெட்டப்பாக்கத்தில் சகோதரர்கள் மோதல்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

வரவிருக்கும் பாண்டிச்சேரி சட்டசபை தேர்தலில் இரண்டு சகோதரர்கள் எதிரெதிராக நெட்டப்பாக்கம் தொகுதியில்போட்டியிடுகிறார்கள்.

தமிழகத்தில் தாமரைக்கனி சுயேச்சையாகவும், அவரது மகன் இன்பத்தமிழன் அ.தி.மு.க.சார்பிலும் போட்டியிடுகிறார்கள்.தமிழகத்தில் அப்பாவும், மகனும் மோதுவது போல் பாண்டிச்சேரியில் சகோதரர்கள் மோதுகிறார்கள்.

பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து அவரது சகோதரர் முத்துநாராயண ரெட்டியார், பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இவர்களைத் தவிர பா.ம.க. வேட்பாளர் தனராஜு மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்களும் இதே தொகுதியில்போட்டியிடுகிறார்கள்.

நெட்டப்பாக்கம் தொகுதியில் மொத்தம் 18,500 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

வைத்தியலிங்கம் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை பாண்டிச்சேரியின் முதல்வராக பதவி வகித்தார். இவர் 1980ம் ஆண்டு முதல்தொடர்ந்து இதே தொகுசியில் போட்டியிட்டு வருகிறார்.

முதல் முறை போட்டியிட்ட போது ஜனாத கட்சி வேட்பாளர் சுப்பராய கவுண்டரிடம் தோற்றுப் போனார். அதன் பின்பு வைத்தியலிங்கம்தோல்வி அடைந்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற தேர்தலின் போது வைத்தியலிங்கத்தின் சகோதரர் த.மா.கா. ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.அ.தி.மு.க.ஆதரவுடன் போட்டியிட்ட வைத்தியலிங்கம்தான் வெற்றி பெற்றார்.

இந்த முறை வைத்தியலிங்கம் தனது சகோதரரைத்தவிர பா.ம.க.வேட்பாளரையும் எதிர்த்து போட்டியிடுகிறார். பா.ம.க.வேட்பாளருக்கு அ.தி.மு.கவின் ஆதரவும் இருக்கிறது.

மேலும் பா.ம.க. வேட்பாளரான தனராஜு பா.ம.கவால் பாண்டிச்சேரிக்கான முதலமைச்சருக்கான வேட்பாளராகமுன்னிருத்தப்பட்டிருப்பது வைத்தியலிங்கத்தின் வெற்றியை பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+