தள்ளுபடிக்கு தள்ளுபடி: ஜெயாவும், தேர்தல் கமிஷனும்
டெல்லி:
தேர்தல் அதிகாரிகள் தன்னுடைய வேட்புமனுக்களைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதாஅனுப்பிய மனுவைத் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் எம்.எஸ். கில் தள்ளுபடி செய்தார்.
தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள கேரள எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் பிள்ளையை உதாரணம் காட்டி, இந்தியத்தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா அனுப்பிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக டாக்டர் கில் நிருபர்களிடம் திங்கள்கிழமைதெரிவித்தார்.
தற்போது பதவியிலிருக்கும் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால், அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று குற்றம் சாட்டப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்கள் வரை யாரும் சொல்ல முடியாது.
அந்த 3 மாதங்களுக்குள் அவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தால்,மேல் முறையீட்டின் மீதான தீர்ப்பு வரும் வரை, அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.
இதன் அடிப்படையிலேயே பாலகிருஷ்ணன் பிள்ளையின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் ஜெயலலிதாவோ நாடாளுமன்றத்திலோ, சட்டசபையிலோ உறுப்பினராக இல்லை. அதனால் அவருடைய வேட்புமனுக்கள்தள்ளுபடி செய்யப்பட்டன.
இது தவிர, ஒரு வேட்புமனுவைத் தேர்தல் விதிமுறைகளின்படி ஏற்கவோ நிராகரிக்கவோ அந்தந்தத் தேர்தல் அதிகாரிக்குத்தான்அதிகாரம் உண்டு. தேர்தல் கமிஷன் இதில் தலையிடாது என்றார் கில்.
முன்னதாக, 2 வெவ்வேறு டான்சி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு முறையே 2 மற்றும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமான சிறைத் தண்டனை பெற்றவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுமக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது.
இதைத் தொடர்ந்து ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்திருந்த ஜெயலலிதாவின் மனுக்களை அந்தந்த தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications