அப்பாவை தோற்கடிப்பேன்: தாமரைக்கனி மகன் சபதம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
அப்பாவை தோற்கடிப்பேன் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தாமரைக்கனியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் அவரது மகன்இன்பத்தமிழன் கூறியுள்ளார்.
1989 ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஒரே ஒரு தடவை மட்டும் எம்.எல்.ஏ.பதவியை இழந்தவர் தாமரைக்கனி.
தொடர்ந்து 22 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் இவர்.
ஆனால் இந்த முறை நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் பல கட்சிகள் உடைந்தது அனைவருக்கும் தெரிந்தது. கட்சிகள் பல உடைந்துகொண்டிருந்த நேரத்தில் தாமரைக்கனிக்கும், அவரது மகன் இன்பத்தமிழனுக்கும் இடையே புகைந்து கொண்டிருந்த சச்சரவு முற்றியது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தாமரைக்கனியைக் கழற்றி விட்டு விட்டு 27வயதான அவரது மகன் இன்பத்தமிழனுக்குசீட் கொடுத்தார்.
இதனால் கடும் கோபத்திற்கு ஆளான தாமரைக்கனி அதிமுகவிலிருந்து விலகினார். அவர் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். தந்தைக்கும், மகனுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடந்து வருகிறது.
இந்தப் புண்ணியவதி (ஜெயலலிதா) எங்கள் குடும்பத்தை இரண்டாகப் பிரித்து வீட்டுக்குள் பிளவை ஏற்படுத்தி விட்டார் என்பதுதாமரைக்கனியின் குற்றச்சாட்டு.
தாமரைக்கனி ஏற்கனவே 1991 ம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகியவர்தான். அப்போது சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் அவரை அதிமுக சேர்த்துக் கொண்டது.
தற்போது தனக்கு சீட் கொடுக்காமல் தன் மகன் இன்பத்தமிழனுக்கு சீட் கொடுத்து விட்டாரே என்ற காரணத்தால்அதிமுகவிலிருந்து விலகியுள்ளார் தாமரைக்கனி. தான் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டதை அறிந்து கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
1962 ம் ஆண்டு முதல் காங்கிரஸின் கோட்டையாக இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தாமரைக்கனியின் கைக்குச் சென்றது. அதன்பிறகுதொடர்ந்து வெற்றி பெற்று வந்து எம்.எல்.ஏ.பதவியை தக்க வைத்துக் கொண்டவர் தாமரைக்கனிதான்.
வரும் சட்டசபைத் தேர்தலிலும் சுயேச்சையாக நின்று ஜெயிப்பேன் என்று திடமாக நம்புகிறார் தாமரைக்கனி.
தாமரைக்கனியின் வீட்டு வாசலில் காத்திருக்கும் இவரது ஆதரவாளர்கள் அனைவரும் எங்கள் ஓட்டு தாமரைக்கனிக்கே என்றுஅடித்துக் கூறுகிறார்கள்.
இருப்பினும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் கூலித் தொழிலாளர்கள், பெண்கள் அனைவரும் முதலில் தாமரைக்கனி இருந்த இரட்டை இலைசின்னத்துக்கே வாக்களிக்களித்துப் பழக்கப்பட்டவர்கள்.
தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் சுயேச்சையாகப் போட்டியிடும் தாமரைக்கனியின் சின்னமும் இரட்டை இலைதான் என்ற அறியாமையில்அவர்கள் அதிமுகவுக்கே ஓட்டுப்போடும் வாய்ப்பும் உள்ளது.
இந்த நிலையில், தாமரைக்கனியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள அவரது மகன் இன்பத்தமிழன் கூறுகையில், நான் எப்படியும்வெற்றி பெற்று விடுவேன் என்கிறார்.
மே 10 ம் தேதி தந்தையா மகனா என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களே கூறி விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications