மே தினம்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
உழைப்பாளர் தினத்தையொட்டி (மே தினம்) தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.
மே 1ஆம் தேதி உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் 8 மணி நேர வேலை உள்ளிட்டஉழைப்பாளர்களின் பணிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
உழைப்பாளர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி: மே தின வாழ்வு அனைவருக்கும் இனித்திட, தன் மேனி வருந்த நாளும் உழைத்திடும் தொழிலாளர் தம் உரிமைகளைநினைந்து, அவர்களின் உயர்வுக்காக திட்டமிட உலகையே சிந்திக்க வைத்த தினம்.
இவ்வேளையில், இந்த ஆண்டின் மேதின விழாவையொட்டி என் உணர்வில் கலந்து நாளும் உவகை அளித்திடும் தொழிலாளர் சமுதாயத்தோழர்களின் வாழ்வு செழித்திட என் இதயங்கனிந்த மேதின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
மூப்பனார்: கோடிக்கணக்கான உழைப்பாளர்களுக்கு இன்னும் சமூக உரிமைகளும், பணிப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. அத்தகையமக்களுக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கச் செய்ய அயராது உழைக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்.
இவர்கள் தவிர ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சங்கரய்யா, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்பட பல தலைவர்கள் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் வாழ்த்து: பிரதமர் வாஜ்பாய் தனது மே தின வாழ்த்துச் செய்தியில், உழைப்பாளர்கள் அனைவரும் நட்புறவுடன் ஒன்றுபட்டுஉழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications