அன்று சரமாரி வசை .. இன்று பாச மழை
சென்னை:
ஜெயலலிதா காரணமாக சரமாரியாக வசைபாடிக் கொண்ட அம்மா சுலோசனா சம்பத்தும், மகன் இளங்கோவனும், தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டி, பாச மழையைப் பொழிந்தனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்றிருந்த சமயத்தில், கருணாநிதி, கர்நாடக முதல்வர் கிருஷ்ணாஆகியோரை கடுமையாக விமர்சித்து ஜெயலலிதா அறிக்கை விட்டிருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன்கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டார்.
இளங்கோவனின் அறிக்கையால் கொதித்துப் போன ஜெயலலிதா, அவரது தாயாரான சுலோச்சனா சம்பத்தை விட்டு பதில்அறிக்கை விடச் செய்தார். அந்த அறிக்கையில், தனது மகனின் அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது என்று சுலோச்சனாசம்பத் கூறியிருந்தார்.
தாயாரின் அறிக்கைக்கு இளங்கோவன் விட்ட பதில் அறிக்கையில் கடுமையாக தாக்கியிருந்தார். அதன் பிறகு தாயும், மகனும்பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை. இந்த நிலையில் வந்தது தேர்தல்.
தி.நகர் தொகுதியில் சுலோச்சனா சம்பத் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் என்றமுறையில் இளங்கோவன் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது ஒரே மேடையில், சுலோச்சனா சம்பத்தும், இளங்கோவனும்மகிழ்ச்சி பொங்கக் காணப்பட்டனர்.
எனது பாசமுள்ள தாயும், அதிமுக வேட்பாளருமான சுலோச்சனா சம்பத்திற்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களியுங்கள் எனஇளங்கோவனும், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவர்களே என்று பாசத்துடன் கூப்பிட்டு அங்கு கூடியிருந்தவர்களை புல்லரிக்கவைத்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications