ஜெ. மனு தள்ளுபடி சரியானதே .. சொல்கிறார் சோ
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையேஎன்று பத்திரிகையாளர் சோ கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் சமீபத்திய ஆலோசகராக கருதப்படும் சோ இவ்வாறு கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிப்பு விவகாம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சோ புதன்கிழமைசென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜெயலலிதா 4 தொகுதிகளில்முறைகேடாக மனுத்தாக்கல் செய்தது, அவருக்கு 3 ஆண்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது ஆகியவற்றைக் காரணம் காட்டிஅவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தேர்தல் விதிப்படி சரியானவையே.
கேரள மாநிலத்தில் இந்த விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளையின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் தற்போது எம்.எல்.ஏவாக இருப்பதால் அவரது மனு ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில்இதுபோல முரண்பாடான செயல்பாடுகள் வந்து விடாமல் தடுக்க தேர்தல் கமிஷன் சில நியதிகளை வகுத்துக் கொண்டு செயல்படவேண்டும்.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஜெயித்து ஆட்சியைப் பிடித்தால் ஜெயலலிதா முதல்வராகப் பதவிஏற்கலாமா என்று கேட்கிறார்கள். அது போன்ற நிலை ஏற்பட்டால், ஆளுநர், பாரபட்சமற்ற சட்ட வல்லுநர்கள் கொண்ட ஒருகுழுவை அமைத்து அவர்களது ஆலோசனையை ஏற்று யார் முதல்வர் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார் சோ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications