இலங்கை அரசு மேல் புலிகள் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கொழுப்பு:

இலங்கையில் புலிகள் அறிவித்திருந்த ஒரு தரப்பு சண்டை நிறுத்தத்தை நிராகரித்ததன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயன்ற நார்வேநாட்டின் சமரச முயற்சியை இலங்கை அரசு முறியடித்து விட்டது என்று விடுதலைப்புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து புலிகள் கூறுகையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது அரசு. கடந்த வாரம்யானையிறவு பகுதியை மீட்கும் முயற்சியில் கடும் தாக்குதல் நடத்தி இருதரப்பிலும் நூற்றுக்கணக்கில் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்குராணுவமே காரணமாகி விட்டது.

நாங்களும் பதிலுக்குபதிலாகத் தாக்குதல் நடத்தியதால் ராணுவத்துக்குக் கடும் சேதம் ஏற்பட்டது. இதை அவர்கள் மிகவும்தாமதமாகவே உணர்ந்தனர்.

அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க முயற்சித்து வந்த நார்வே தூதுக்குழுவினரின் முயற்சியை இலங்கை அரசு முறியடித்து விட்டது என்றேகூறலாம்.

யாழ்ப்பாணத்தில் எங்களை நோக்கி கடும் தாக்குதல் நடத்தியதால் ராணுவ வீரர்களுக்குத்தான் பெருமளவில் சேதம் ஏற்பட்டது என்றுபுலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கை வந்தார் நார்வே தூதுவர்:

இதற்கிடையே நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கை வந்துள்ளார்.

கடந்த வாரம் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையால் நார்வேயின் அமைதி முயற்சியில்ஏற்பட்டுள்ள பின்னடைவின் போது, நார்வே தூதர் மீண்டும் இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் திங்கள்கிழமை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை சந்தித்துப் பேசினார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கேவையும் சந்தித்துப் பேசுவார் என்று நார்வே தூதரக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி விடுதலைப்புலிகள் ஒரு தரப்பு சண்டை நிறுத்தம் அறிவித்திருந்தனர். சண்டை நிறுத்தத்தை 3முறை நீட்டித்தனர். இதற்கு இலங்கை அரசு எவ்வித பதிலும் கூறாத காரணத்தால் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி சண்டை நிறுத்தத்தைக்கைவிட்டுவிட்டு, ராணுவ வீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

அவர்கள் கூறுகையில், அரசு எவ்வித பதிலும் கூறாத காரணத்தால் நாங்கள், கனரக பீரங்கிகள் மற்றும் ஆர்ட்டிலரிவெடிகுண்டுகளை பயன்படுத்தும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டோம் என்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+