அரசு பஸ்- லாரி மோதல்: 6 பேர் பலி
கோவை:
கோவை அருகே நள்ளிரவில் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
கோவை அருகே உள்ள அரசூர் அரசு கோழிப் பண்ணை அருகே ஒரு லாரியும், ஒரு அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. கோவையிலிருந்துபுதன்கிழமை இரவு 11 மணி அளவில் ஒரு அரசு பஸ் நாமக்கல்லுக்குப் புறப்பட்டுச் சென்றது.
இந்த பஸ் கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஹைதராபாத்திலிருந்து சிமெண்ட்லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கோவைக்கு வந்து கொண்டிருந்தது.
இவை இரண்டும், நேருக்கு நேர் அரசூரில் மோதிக் கொண்டன. இந்த கோரமான விபத்தில் பஸ்சில் பயணம் செய்த நாமக்கல்லைச் சேர்ந்த தாஸ் (30), அதேஇடத்தில் பலியானார்.
மேலும் நான்கு பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தனர். இதில் நாமக்கல்லைச் சேர்ந்த குருசாமி (50), கூடலூரைச் சேர்ந்தவிஜயலட்சுமி (31), ஆந்திரா மாநிலம், ராமன்னாபேட்டையைச் சேரந்த லாரி டிரைவர் நரசிம்மா (25), மற்றும் கிளீனர் ஒருவரும் இறந்தனர்.
இந்த விபத்தில் மருத்துவனையில் சேர்க்கப்பட்டவர்களில் நாமக்கல்லைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் இறந்தார்.இந்த விபத்தில் கோவை, நாமக்கல்,ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் 22 பேரும் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசராணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications