சென்னை பயணம் ரத்து .. பாண்டி.யில் ஜெ. பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வியாக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்வதாக இருந்த ஜெயலலிதாவின் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதற்கு மாறாக பாண்டிச்சேரியில் அவர் பிரசாரம் செய்கிறார்.
தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்த ஜெயலலிதா சென்னையில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில்பிரசாரம் செய்வதாக கூறப்பட்டிருந்தது. தற்போது அது ரத்து செய்யப்பட்டு விட்டது.
கடலூரில் தற்போது உள்ள ஜெயலலிதா அங்கிருந்து பாண்டிச்சேரி செல்கிறார். அங்கு முத்தியால்பேட்டை,கிளியனூர், வானூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். அங்கு முடித்த பின், திண்டிவனம், மதுராந்தகம்,செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சிபுரம், வந்தவாசி, சேத்துப்பட்டு, செஞ்சி, திருவண்ணாமலை ஆகிய தமிழகஊர்களில் பிரசாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications