அசாம் கன பரிஷத் தொண்டர்கள் 6 பேர் படுகொலை
கவுஹாத்தி:
அசாமில் அசாம் கன பரிஷத் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றின் முன் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றுகிரானைடு வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். இரண்டு பாதுகாவலர்கள் உள்பட16 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
தலைநகர் கவுஹாத்தியில் உள்ள கோல்பாரா பகுதியில் இயங்கி வரும் அசாம் கன பரிஷத் அரசியல் கட்சிஅலவலகத்தின் முன் உல்பா தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வந்து கிரானைடு வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல்நடத்தினர். இதில் 6 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அசாம் கன பரிஷத் கட்சி உறுப்பினர்கள். காயமடைந்தவர்களில்இரண்டு போலீஸ்காரர்களும் அடங்குவர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர்.
அசாமில் வரும் 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் இச்சம்பவம் நடந்திருப்பதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இதே போல் வெடிகுண்டு வீசி உல்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாரதிய ஜனதா கட்சிவேட்பாளர் உள்பட 40 பேர் உயிரிழந்தனர். பாஜக மற்றும் அசாம் கன பரிஷத் கட்சியைச் சேர்ந்த 150 க்கும்மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்தனர்.
போலீஸ் குவிப்பு:
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடந்துள்ளதால் மத்திய உள்துறை 2,500 மத்தியபுறக்காவல் படை வீரர்களை அசாம் மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications