சட்டசபைத் தேர்தல்: சென்னையில் போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சென்னையில் மட்டும் 12,000 போலீசார் ஈடுபடுவர் என்று சென்னை மாநகரபோலீஸ் கமிஷனர் பி. காளிமுத்து தெரிவித்தார்.

புதன்கிழமை நிருபர்களிடம் பேசிய காளிமுத்து கூறுகையில், நகரில் உள்ள 3,636 வாக்கச் சாவடிகளில் 5,000போலீசாரும், சட்டம் ஒழுங்கிற்காக 7,000 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். 261 ரோந்துப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பிரச்சினை ஏற்படும் பகுதிகளாகக் கருதப்படும் ஆர்.கே. நகர், ராயபுரம், புரசைவாக்கம், பெரம்பூர், எழும்பூர்உள்பட 32 பகுதிகளிலும் சிறப்பு ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த 14 கம்பெனிகள் சென்னையில் குவிக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை அமைதியாக நடத்தவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் போதுமான தடுப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக இரு வேறுபட்ட கட்சியினர் ஒரே பகுதியில் பிரச்சாரம் செய்வதுதடுக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.

வாக்குச் சேகரிக்கும் போர்வையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். கடந்த தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியவர்களின் பெயர்கள்சேகரிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் தற்போதும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை யாரும்கைது செய்யப்படவில்லை என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+