ஸ்டாலின் கடந்து வந்த பாதை
சென்னை:
இந்தியாவின் புகழ் பெற்ற அரசியல்வாதியின் மகனும் ரஷ்யாவின் சர்வாதிகாரி ஜோசப் ஹிட்லரின் பெயரை கொண்டவருமான ஒருவர்பாரம்பரியம் மிக்க பெரிய தமிழக கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தயாராகி வருகிறார்.
யார் அவர்? தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதியின் மகனும், சென்னை நகர மேயருமான மு.க.ஸ்டாலின்தான் அவர்.ஸ்டாலினுக்கு தற்போது 50 வயதாகிறது
தமிழக சட்டசபை தேர்தல் இந்த மாதம் 10ம் தேதி நடக்கிறது, இவர் தமிழக ஆளும் கட்சியான தி.மு.கவின் சார்பில் ஆயிரம் விளக்குதொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இவர் அங்கு பெரும் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இவர் வட மாநிலங்கள் முழுவதிலும் கருணாநிதியின் வாரிசு என்றே கருதப்படுகிறார். கருணாநிதியும் கடந்த 5 ஆண்டுகளாக தனது மகன்ஸ்டாலினிடம் தி.மு.க தலைமை பொறுப்பை அவரிடம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.
ஸ்டாலின் பள்ளிப் பருவத்திலிருந்தபோது தி.மு.கவில் இணைந்து பணியாற்றி வருகிறார். அன்று முதல் இன்று வரை தி.மு.கவுக்காகஉழைத்து வரும் மூத்த தலைவர்கள்கூட ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்த தயங்கவில்லை.
தனது தந்தையின் ஆதரவுடன் ஸ்டாலின் தி.மு.கவில் தனது ஆதரவாளர்களை அதிகமக இணைத்துக் கொண்டு தான் தலைவராவதையாராவது தடுக்க முனைந்தால் அவர்கள் முயற்சியை முறியடிக்க தயாராகி வருகிறார்.
1976ம் ஆண்டு 1 வருடம் சிறையில் அடைக்கப்பட்டார் ஸ்டாலின். அது நடந்தது அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த ஆரம்பகாலம்.அதன்பின் அவர் தி.மு.கவில் இணைந்தார்.
அவர் தி.மு.க. இளைஞர் அணியின் தலைமை பொறுப்பேற்றார். 1989ம் ஆண்டு முதல் முறையாக தமிழக சட்டசபைக்குதேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை,
அதன் பிறகு 1996ம் ஆண்டு ஸ்டாலின் சென்னை நகர மேயராக பொறுப்பேற்றார். சென்னையை அழகுபடுத்த வேண்டும் என அவர்செயல்படுத்திய திட்டங்கள் பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றது.
மேலும் அவர் சென்னை மாநதராட்சி அரசு அலுவலகங்களுக்கும் திடீர் விஜயம் செய்து அங்கு நடக்கும் அலுவல்களை கண்காணித்ததும்அவருக்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஸ்டாலினுக்கு சிறந்த மேயர் விருது வழங்கப்பட்டது. சென்னை நகர மேயராக கடந்த 5 ஆண்டுகளாகஇருந்து வரும் ஸ்டாலின் தி.மு.கவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் என்றால் அது மிகையாகாது.
கருணாநிதியை போல் ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களை அதிக அளவில் சந்திப்பதில்லை. கருணாநிதியைப் போல் அவர் சிறந்த எழுத்தாளரும்அல்ல.
மற்ற தி.மு.க. தலைவர்கள் போல் நாத்திக வாதம் பேசிக் கொண்டு அவர் கோவில்களுக்கு செல்லாமல் இருப்பதில்லை. தனதுதேர்தல் பிரச்சாரத்தையே அவர் வினாயகர் கோவிலில் பிரார்த்தனை செய்துவிட்டுதான் துவங்கினார்.
ஸ்டாலின் புகழ் பெற்றது அவரது குடும்பத்திற்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் சகோதரரான மு.க.முத்துவேதி.மு.கவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனாலும் இது ஸ்டாலினின் முன்னேற்றத்தை எந்த விதத்திலும் தடை செய்யும்என தோன்றவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications