இலங்கையில் அமைதி ஏற்பட கனடா பெண் தூதர் முயற்சி
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கனடா பெண் தூதர் வன்னி காட்டுப்பகுதிக்குச் சென்றுவிடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்துசண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில் புலிகள் கடந்த டிசம்பர் 24 ம் தேதி ஒரு தரப்பு சண்டை நிறுத்தம் அறிவித்திருந்தனர். பின்னர் அதை 4முறை நீட்டித்தனர். இதை இலங்கை அரசு கண்டுகொள்ளாத காரணத்தால் அவர்கள் சண்டை நிறுத்தத்தை வாபஸ்பெற்றுக் கொண்டு தாக்குதலைத் தொடங்கினர்.
மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ராணுவத்திற்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் நார்வே தூதுக்குழு ஈடுபட்டு வருகிறது. தூதுக்குழுத்தலைவர் எரிக் சோல்ஹெம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையைத்தொடங்கி வைப்பதில் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, கனடா பெண் தூதர் ரூத் ஆர்ச்சி பால்டு வன்னி காட்டுக்குள் சென்று புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார். அவர், இலங்கையில் சண்டை ஓய்ந்து அமைதி ஏற்படஅனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்ச்செல்வத்திடம் கேட்டுக் கொண்டார்.
பின்னர் அவர் கொழும்பு திரும்பி நார்வே தூதுக்குழுவின் சமரச முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நார்வேதூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications