தூர்தர்ஷனின் "எக்ஸிட் போல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தூர்தர்ஷன் சார்பில் மே 10-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும் வாக்குச் சாவடிகளில் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளது.
தேர்தல் நடக்கும் தினத்தன்று வாக்குப் பதிவு செய்து விட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்றுஅவர்களது கருத்தைக் கேட்டு ஒளிபரப்பும் நிகழ்ச்சி தூர்தர்ஷனில் ஒவ்வொரு தேர்தலின்போதும் நடந்து வரும் நிகழ்ச்சியாகும்.
இந்த சட்டசபைத் தேர்தலின்போதும் இந்த எக்ஸிட் போல் எனப்படும் வாக்குச்சாவடி கருத்துக்கணிப்பு நடைபெறவுள்ளது. 10-ம்தேதி வாக்குப் பதிவு தினத்தன்று வாக்காளர்களிடம் கருத்துக் கேட்கப்படும்.
பின்னர் வாக்குப் பதிவு நேரம் முடிந்தவுடன் மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரை சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புசெய்யப்படும். தூர்தர்ஷன் செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications