தொங்கு சட்டசபை வராது .. கருணாநிதி நம்பிக்கை
சென்னை:
தமிழகத்தில் தொங்கு சட்டசபை வராது என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கருணாநிதி தற்போது மதுரையில் உள்ளார். அங்கு வெள்ளிக்கிழமைபிரச்சாரத்திற்கிடையே கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும்.
திமுகவுக்கோ அல்லது திமுக கூட்டணிக்கோ பெரும்பான்மை பலம் கிடைக்காது எனப் பேசி வருகிறார்கள். அது தவறு. அப்படிஒரு நிலை ஏற்படாது. தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படாது.
எங்களுடன் உள்ள ஜாதிக் கட்சிகளை விமர்சிப்பதில் அர்த்தமில்லை. அவர்களை வைத்து ஜாதீய ஒழிப்பில் திமுக தீவிரமாக பாடுபடப்போகிறது. தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி நீடிக்கும்.
பாரதீய ஜனதாக் கட்சியில் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் வகுப்புவாதம் மறையாது என்று சொல்ல முடியாது. கடந்த இரண்டுஆண்டுகளாக அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். எங்காவது வகுப்புவாதம் தலைதூக்கியது என்று கூற முடியுமா? என்றார்அவர்.












Click it and Unblock the Notifications