மதுரையில் இன்று மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர்திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

காசி யாத்திரை, சுமங்கலி பூஜை உள்பட பல சடங்குகளுக்குப் பின்னர் மீனாட்சியம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.

தமிழகத்தின் தென்மாவடங்களில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்று மதுரை. அங்குள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மிகப்புகழ் பெற்றது.

சக்திதேவியான பார்வதி வீற்றிருக்கும் எல்லா தலங்களிலும் மிகச் சிறப்பாக கருதப்படுவது 3 திருத்லங்கள். அவை காஞ்சி காமட்சி,மதுரை மீனாட்சி, காசி விசாலட்சி ஆகியவை,

இந்த 3 திருத்தலங்களில் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் கோலகலமாக, மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்

சித்திரைத் திருவிழா கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்கியது.

திருவிழாவின் ஒரு பகுதியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடந்தது.இத்திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+