அதிமுக ஊழலற்ற ஆட்சி தரும்: மூப்பனார் நம்பிக்கை
மதுரை:
மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். ஆனால் ஊழலற்ற நல்லாட்சியையே அது தரும் என்று தமாகா தலைவர்மூப்பனார் நம்பிக்கையுடன் கூறினார்.
மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக ஆட்சியிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. சிமெண்ட், ரேஷன் அரிசி விநியோகம், இலவச வேட்டி சேலைஎன்று அனைத்துத் துறைகளிலும் திமுகவும் ஊழல் செய்திருக்கிறது.
அதிமுகவுடன் திமுக ஆட்சியை ஒப்பிட்டு எதில் ஊழல் அதிகம் என்று அளந்து கூறுவதற்கு என்னிடம் எந்தஅளவுகோலும் இல்லை.
அதிமுக ஆட்சி வந்தவுடன் திமுக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி தண்டனை தருவோம் என்று நான்சொல்ல மாட்டேன். அது என் வேலை அல்ல.
ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்புதான் சிறந்தது. உயர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்புக்களை மட்டும் நம்பி அரசு நடத்தமுடியுமா? அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். அதிமுகவினர் நல்லாட்சியே தருவார்கள். உரிய நேரம் வரும்போதுகாமராஜர் ஆட்சி பற்றித் தெரிவிப்பேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications