கருணாநிதிக்கு மூப்பனார் திடீர் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கருணாநிதி நூறு வயது வாழ வேண்டும் என தான் பிரார்த்தனை செய்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனார் கூறியுள்ளார்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் கூறுகையில், வரவிருக்கும்தேர்தல்தான் தனது கடைசி தேர்தல் என கருணாநிதி கூறி வருகிறார்.

அவர் நூறாண்டு காலம் வாழ வேண்டும். இதற்காக அவர் கும்பிடாத மீனாட்சி அம்மனிடம் நான் பிரார்த்தனைசெய்கிறேன்.

நாங்கள் இருவரும் எதிரெதிர் அணியில் இருந்தாலும் நாங்கள் நண்பர்கள்தான். முகத்தை திருப்பிக் கொள்ளமாட்டோம்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்குவது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.ஆனால் அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் நான் இல்லை.

தேர்தலுக்கு பின் த.மா.கா -தி.மு.க. கூட்டணி ஏற்படும் என வைகோ கூறி வருகிறார். எங்கள் நட்பை கொச்சைபடுத்தாதீர்கள் என கருணாநிதி கூறியுள்ளார். என் கருத்தும் அதுதான். இதை திசை திருப்ப வேண்டாம்.

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திருநாவுக்கரசுவும் நானும் நண்பர்கள். அவர் என்னை சந்தித்ததில் எந்தஅரசியல் முக்கியத்துவமும் கிடாைது என்றார்.

மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளிக்க மூப்பனார் சக்தர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார். நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது வெங்காய பகோடாவை சாப்பிட்டவாறே பேட்டியளித்தார்.மூப்பனாரின் பேச்சை பீட்டர் அல்போன்ஸ் தெளிவாக நிருபர்களிடம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+