கோவையில் புதிய தமிழகம் - மதிமுக தொண்டர்கள் மோதல்
கோவை:
கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு வாக்குச் சேகரிக்கச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவிக்கும்மதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக 2 பேர் காயமடைந்தனர். 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வால்பாறைத் தொகுதிக்கு உட்பட்ட சுப்பேகவுண்டன் புதூரில் திமுக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஓட்டுக்கேட்டுச் சென்றனர்.
சுப்பேகவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவி ஈஸ்வரியும் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இவர்கள் செல்லும் முன்பாக அந்தப் பகுதியில் மதிமுகவினரும் ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதையடுத்து இருகட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இருதரப்பினரும் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதில் ஈஸ்வரி உள்பட இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் ஆனைமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மோதலில்ஈடுபட்டதாக 2 திமுக தொண்டர்களும் 4 மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications