மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறை சரிசெய்ய இன்ஜினியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் சட்டசபைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் திடீரென்று கோளாறு ஏற்பட்டால்அவற்றை சரிசெய்யும் வகையில் பெங்களூரிலிருந்து 30 இன்ஜினியர்கள் சென்னைக்கு வந்துள்ளனர் என்று தமிழக தலைமைத் தேர்தல்ஆணையர் மிருதுயுஞ்சய் சாரங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக சட்டசபைக்கு வரும் 10 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இந்தத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 75,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இவற்றில் 69,000 வாக்குப்பதிவுஇயந்திரங்கள் சென்னைக்கு வந்து விட்டன.

அவைகள் மாவட்டவாரியாகப் பொதுமக்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.பி.எச்.ஈ.எல்.மற்றும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் தயாரித்துள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் பிரச்சனையோ,கோளாறோ ஏற்படாது.

எதிர்பாராத வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அவற்றை சரிசெய்வதற்காக பெங்களூரிலிருந்து30 இன்ஜினியர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள்என்றார் சாரங்கி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+