என்னை பட்டத்து இளவரசன் என்று கூற வேண்டாம்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என்னை பட்டத்து இளவரசன் என கூற யாருக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என தமிழக முதல்வர்கருணாநிதியின் மகனும், சென்னை நகர மேயருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த மாதம்10ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அ.தி.மு.க,ம.தி.மு.க. கட்சிகள் ஸ்டாலினை தாக்கி பிரச்சாரம் செய்து வருகின்றன.

தனது மகன் ஸ்டாலினை முதல்வராக்குவதற்காகத்தான் சூழ்ச்சி செய்து எனது வேட்புமனுவை நிராகரிக்க வைத்துவிட்டார் கருணாநிதி என ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.

ஸ்டாலினை முதல்வராக்குவதற்காகத்தான் ம.தி.மு.கவை கூட்டணியிலிருந்து விலக்கி விட்டார் என ம.தி.மு.க.தலைவர் வைகோ கூறியிருந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், தி.மு.க. ஜனநாயக கட்சி.யாருக்கு என்ன பொறுப்பு வழங்குவது என கட்சிதான் முடிவு செய்யும்.

என்னை பட்டத்து இளவரசனாக முடிசூட்டும் அங்கீகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை.

நான் முதல்வராக வருவேன் என்று ஜெயலலிதாவும், வைகோவும்தான் கூறி வருகிறார்கள். இதை நான்வன்மையாக மறுக்கிறேன்.

தி.மு.கவுக்கு கருணாநிதிதான் தலைவராக நீடிப்பார் இதனால் என்னைப்பற்றி பேசுவது தேவையில்லாதது.

சில பத்திரிக்கைகள் என்று கூறி சில முடிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். இது கெட்ட எண்ணம்கொண்டவர்களின் சதித் திட்டம். கருத்துக்கணிப்பு வெளியிடும் முன், மாநிலம் முழுவதும் இருக்கும் பல்வேறுதொகுதிகளையும் பார்வையிட்டு வர வேண்டும்.

நான் மேயர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கூறுகிறார்கள். மேயர் பதவியிலிருந்து நான் விலகுவது என்றபேச்சுக்கே இடமில்லை. மே மாதம் மேயராக பதவியேற்றேன். உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம்இருக்கிறது. அது வரை நான் சென்னை நகர மேயராக நீடிப்பபேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+