இங்கிலாந்து செல்லும் தமிழர்களிடம் கடும் விசாரணை
லண்டன்:
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் தமிழர்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாக இருக்கிறார்கள். இங்கிலாந்து உள்துறைஅமைச்சகம் இச்செய்தியை உறுதிப்படுத்துகிறது.
சட்ட விரோதமாக வேறு நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களின் பட்டியலில் தமிழர்களும் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானியர்கள், தமிழர்கள், சோமாலியர்கள், குர்துக்கள், ரோமானிய நாடோடிகள், அல்பானியர்கள், கருங்கடலில் இருந்துவரும் போன்டிக் கிரேக்கர்கள், சீனர்கள் ஆகியோர் முறையான பாஸ்போர்ட்டுகள் இல்லாமல் இங்கிலாந்துக்கு வருகிறார்கள்.
பெரும்பாலும் இவர்கள் தஞ்சம் புகுவதற்காகவே இங்கிலாந்துக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 700 ஆப்கானிஸ்தானியர்களும், 470 சோமாலியர்களும், 425 ஈராக்கியர்களும், 410தமிழர்களும் (தமிழர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்) அகதிகளாக இங்கிலாந்து வந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 கோடி பேர் வெளி நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு இடம் பெயர்கின்றனர். இதனால் குடியேற்றத்துறைஅதிகாரிகள் பெரும் சோதனைக்கு உள்ளாகின்றனர் என்று உள்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications