சொந்த செலவில் பிரச்சாரம் செய்யும் திமுக தொண்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் உச்சகட்டபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டர்களும் சுறுசுறுப்பாக கட்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் வசிக்கும் வயதான தொண்டரான வாயரடி கிருஷ்ணமூர்த்தி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுதத்ாமல் தினமும காலைமுதல் மாலை வரை தனது மொபெட்டில் தனியாக தான் சார்ந்திருக்கும் கட்சியான தி.மு.கவுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவரது மொபெட்டின் கைப்பிடியில் மைக்கை பொருத்தி அதில் டேப்ரிக்கார்டரையும் இணைத்துள்ளார். அதில் கட்சி பாடல்களை போட்டுபிரச்சாரம் செய்து வருகிறார். இடையிடையே நல்லாட்சி அமைய தி.மு.கவுக்கு வாக்களியுங்கள் என பிரச்சாரமும் செய்கிறார்.

இவர் தி.மு.க.வட்டாரங்களில் பிரபலமானவரும் இல்லை. இவர் தனது கட்சியின் வெற்றிக்காக தனது சொந்த பணத்தைத்தான் செலவுசெய்கிறார். இவர் கடந்த 37 வருடமாக தி.மு.க, தொண்டராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சாதாரண வேட்டியை உடுத்தியிருக்கிறார். இவர் கூறுகையில், இந்த முறையும் கருணாநிதிதான் மீண்டும் முதல்வராவார் என்றார்.

கிருஷ்ணமுர்த்தி தி.மு.க. பொருளாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி போட்டியிடும் அண்ணாநகரில் பிரச்சாரம் செய்துவருகிறார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+