பிரச்சாரம் தீவிரம்: ஜெ.- கருணாநிதி நேரடி மோதல்
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் இதுவரை கண்டிராத அளவு இரு எதிர்க்கட்சிதலைவர்களும் ஒருவரை ஒருவர் நேரடியாக தாக்கி தேர்தல் பிரச்சாரத்தை சூடாக்கிகொண்டிருக்கிறர்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாலர் ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டபின்பு ஜெயலலிதா நேரடியாக கருணாநிதி மேல் புகார் கூற ஆரம்பித்தார். அதன் பின்இருவரும் ஒருவரை மற்றவர் குறை கூறவதும் நேரடியாக வார்த்தை போர்களில்ஈடுபடுவதும் அதிகமாகி விட்டது.
இதில் முக்கியமான விஷயம் இவர்கள் இருவரும் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிஅமைத்தால் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதையெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள்போல் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஒருவர் மீது ஒருவரைத் தாக்கிக் கொள்வதில்ஈடுபட்டு வருகிறார்கள்.
எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் கருணாநிதிதான். அவர்தான்தேர்தல் அதிகாரிகளை மிரட்டி என் வேட்புமனுவை நிராகரிக்க செய்துவிட்டார். அவர்மகன் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக என் வேட்புமனுவைஏற்கவிடாமல் செய்குவிட்டார் என ஜெயலலிதா கூறுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் இது நியாயமா? இது நீதியா?இதற்கு மக்களே நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் எனக் கேட்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் புகார் கருணாநிதியின் கோபத்திற்கு தூபம் போட்டுள்ளது. நானாஅவரை 4 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சொன்னேன். அவர்படித்தவர்தானே? அவருக்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் தெரியாதா?ஒருவர் 4 தொகுதிகளில் போட்டியிட்டால் வேட்புமனு நிராகரிக்கபடும் எனதெரியாதா?
அவரை நான் 4 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யச் சொன்னேனா? இல்லைஎங்கள் கட்சியினர் யாராவது சொன்னார்களா?
ஸ்டாலின் முதல்வரானால் என்ன தவறு? மிசா சமயத்தில் சிறைக்கு சென்றுகொடுமைகளை அனுபவித்தவர் ஸ்டாலின். அவர் முதல்வரானால் என்ன தவறு? எனஜெயலலிதாவின் புகார்களுக்கு கேள்விகள் கேட்டே பதில் தாக்குதல் கொடுத்துவருகிறார் கருணாநிதி.
அடுத்த நடவடிக்கையாக கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் ஊழலில்ஈடுபட்டிருப்பதாகக் கூறி கையேட்டினை வெளியிட்டு வினியோகித்து வருகிறார்ஜெயலலிதா.
ஊழல் புகார் கூற ஒரு தகுதி வேண்டாமா? ஜெயலலிதா போய் ஊழல் புகார்சொல்லலாமா. அவர் எம்.எல்.ஏவே ஆக முடியாது. அவர் எப்படி முதல்வராவார்எனக் கேட்டு பிரச்சாரம் செய்கிறார் கருணாநிதி.
இந் நிலையில் கருணாநிதி- ஜெயலலிதாவின் சண்டைக்குள் நுழைந்திருக்கிறார்த.மா.கா. தலைவர் மூப்பனார். ஜெயலலிதா ஏன் முதல்வராகக் கூடாது? காமராஜர் கூடமுதல்வராகும் போது எம்.எல்.ஏவாக இல்லையே? அதன் பின் தானே அவர் தேர்தலில்நின்று வெற்றி பெற்றார் என்கிறார்.
இந்தச் சண்டையில் புகுந்துள்ளனர் தேர்தல் அறிவிப்பு வரை த.மா.காவில் இருந்தவரும்தற்போது அதிலிருந்து விலகி த.மா.கா.ஜனநாயக பேரவை என்ற அமைப்பைதொடங்கி நடத்தி வருபவருமான சிதம்பரமும்,மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடுவும்.
முப்பனார் எவ்வாறு ஜெயலலிதாவையும், காமராஜரையும் ஒப்பிடலாம் என்கின்றனர்.
மூப்பனாரும் சும்மா இல்லை. ஜெயலலிதாவை காமராஜரோடு ஒப்பிட்டதோடுநிறுத்தாமல் அண்ணாவுடனும் ஒப்பிட்டார். முதல்வரான போது அண்ணா எம்.எல்.ஏ.இல்லையே என்றார்.
இது தி.மு.கவினரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. ஜெயலலிதாவை காமராஜரோடும்,அண்ணாவோடும் ஒப்பிடுவது தவறு. அவர்கள் ஊழல் வழக்கில் சிறை தண்டனைபெற்றவர்கள் கிடையாது.
ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர். இவரை அவர்களோடுஒப்பிடுவதா எனக் கேட்கின்றனர்.
தேர்தலுக்கு இன்னமும் 5 நாட்கள் உள்ள நிலையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும்வார்தைப் போரிலும், அறிக்கைப் போரிலும் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழல் ஆட்சியா? நல்லாட்சியா? தொடரவேண்டாமா இந்த பொற்காலம்? எனகருணாநிதியும்,
சதித்திட்டம் போட்டு என்னை தேர்தலில் போட்டியிட விடாமல் செய்த கருணாநிதிக்குபாடம் புகட்டுங்கள் என ஜெயலலிதாவும் பொதுமக்களிடம் கோரிக்கைவைக்கின்றனர்.
இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? திருவாளர் பொதுஜனம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கிறார். சரியான தீர்ப்பை 10ம் தேதி தேர்தல் தினத்தன்று கொடுத்துவிடுவார்.
யு.என்.ஐ.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications