பாக். எல்லையில் இந்தியா மாபெரும் அணு ஆயுத போர் ஒத்திகை
டெல்லி:
அணு ஆயுதப் போர் வந்தால் அதை எதிர்கொள்வது குறித்த மாபெரும் போர்ஒத்திகையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
60,000 வீரர்கள், 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், டாங்கிகள், பீரங்கிகள்,நவீன ஆயுதங்கள், ஏவுகணைகள் இந்த ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் பாலைவனத்தில் பாகிஸ்தான் எல்லையில் இந்த மிகப் பெரிய அணு ஆயுதபோர் ஒத்திகை நடக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா நடத்தும் மிகப் பெரியபோர் ஒத்திகை இது தான்.
இது குறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் சுருதி கந்த் கூறுகையில்,முதல் கட்டமாக எதிரிப் படைகள், எதிரியின் ஆயுதங்களை உளவு பார்த்து அதைஎப்படி அழிப்பது என்பது குறித்த ஒத்திகை நடக்கிறது. இந்த ஒத்திகை பயிற்சி இந்தமாதம் 10ம் தேதி முடிவடையும் என்றார்.
5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஒத்திகையில் 60,000 ராணுவ வீரர்கள்பங்குபெறுகின்றனர். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட டி-72 பீரங்கிகள், 100 ராணுவவாகனங்கள், போர் விமானங்களும் போன்றவை பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த பயிற்சி ராஜஸ்தான் பாலைவனத்தின் பிகானர் பகுதியில் நடைபெறுகிறது.
இந்திய விமானப்படை சென்ற ஆண்டு 100 போர்விமானங்களை கொண்டு இதேபோன்ற ஒத்திகையில் ஈடுபட்டது. இந்த ஆண்டு தரைப்படையுடன் சேர்ந்து முழுவெற்றி என்ற பெயரிலான ஒத்திகையில் ஈடுபடுகிறது.
இந்த ஒத்திகை சக்தி வாய்ந்த ஆயுதம் தாங்கிய ராக்கெட்டுகள், மற்றும் போரில்பயன்படுத்தப்படும் ஏவுகணைகளை ஏவுவதுடன் நிறைவடையும்.
இந்த இரு பயிற்சிகளும் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரான்பகுதியில் நடைபெறும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications