மூப்பனாருக்கு முதல்வர் சவால்!
மதுரை:
என் மேல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறியுள்ள ஊழல்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிட்டு, அதை அவர்நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமானகருணாநிதி கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க தனித்து ஆட்சி அமைக்கதேவையான அளவு தொகுதிகளில் வெற்றி பெறும்.
வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் என் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டேன். என் பிரச்சாரத்திற்கு வந்த மக்கள் கூட்டம் எனக்கு மிகுந்த நம்பிக்கைஅளிப்பதாக இருக்கிறது.
பெண்கள் கூட்டமும் நான் நினைத்த அளவு அதிகமாகவே இருக்கிறது. சாலையின்இருபக்கமும் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் பெண்களும் அதிகமாக இருந்தனர்.
தி.மு.க தனித்து ஆட்சியமைக்கும். அதில் எந்த விதமான மாறுதலும் கிடையாது.
ஜெயலலிதா ஊழலற்ற ஆட்சி அளிப்பார் என மூப்பனார் உத்தரவாதம்கொடுத்துவிட்டார். அது பற்றி நான் என்ன சொல்வது?
ஜெயலலிதாவுக்கு மக்கள் பாவமன்னிப்பு வழங்கிவிட்டதாக மூப்பனார் கூறியுள்ளதால்அவர் ஜெயலலிதா பாவம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
தி.மு.க ஊழல் செய்துள்ளதாக மூப்பனார் கூறியுள்ளார். அதற்கான ஆதாதங்களைஅவர் வெளியிடட்டும். நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.
அழகிரி தி.மு.கவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனது பொதுவாழ்வில் என்நெஞ்சில் எத்தனையை ஈட்டிகள் பாய்ந்துள்ளன. அதுவில் இதுவும் ஒன்று.
தி.மு,கவில் உட்கட்சி பூசல் இருப்பது கட்சிக்கு பாதகம்தான். அதில் ஈடுபடுபவர்கள்நாட்டின் நலன் கருதியாவது திருந்த வேண்டும் என்றார்.
தேர்தலுக்குப்பின் தி.மு.க. உடைந்துவிடும் என தமிழ்க்குடிமகன் கூறியுள்ளாரே எனநிருபர்கள் கேட்ட போது தமிழ்க்குடிமகனா யார் அது?என கேள்வி எழுப்பினார்முதல்வர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications