திமுக ஆட்சியிலும் குறை உண்டு: சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக ஆட்சியில் குறையே இல்லை என்று நான் சொல்லவில்லை என்று தமாகா ஜனநாயகப் பேரவைத் தலைவர்சிதம்பரம் கூறினார்.

காட்டுமன்னார்குடி தொகுதியில் தமாகா ஜனநாயகப் பேரவை வேட்பாளரை ஆதரித்து அவர் பிரச்சாரம்செய்கையில்,

அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத விரோதமாகச் செயல்பட்டால், அதுதான் மதச் சார்புள்ள அரசு.

உண்மையிலேயே அதிமுக தான் மதச் சார்பு அணியாக இருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றால் அவர்தான் முதல்வர் ஆவார் என்று திமுக கூட்டணியில் கூறப்படுகிறது.

ஆனால் அதிமுக கூட்டணியில் தலைவரே போட்டி போட இயலாத ஒரு சூழ்நிலையில் யாரைத் தலைவராகத்தேர்ந்தெடுப்பார்கள் என்பது கேள்விக் குறிதான்.

ஜெயலலிதா தப்பித் தவறி முதல்வராக வந்தால் நாட்டுக்கு தான் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றிஎதுவும் பேசவில்லை.

தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றித்தான் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்.

வீட்டுவரி பாக்கி வைத்திருந்தாலே, உள்ளாட்சித் தேர்தலில்கூட போட்டி போட முடியாது.

2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்று தெரிந்தும், 4 தொகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்தார்.

4 தொகுதிகளிலும் சட்டம் காப்பாற்றப்பட்டுள்ளது.

இதற்காக வாதிட டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

"சட்டத்தைத் திருத்த வேண்டும்" என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதன் மூலம் இவர்களே சட்டத்தை மீறியதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

திமுக ஆட்சியிலும் குறைகள் உண்டு. குற்றம் குறைகள் இல்லாத இடம் கல்லறை மட்டுமே என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+