லாரி மரத்தில் மோதி 3பேர் சாவு
சேலம்:
ஆத்தூர் அருகே லாரி மரத்தில் மோதியதில் 3 பேர் இறந்தனர். 22 பேர்காயமடைந்தனர்.
சேலம் அருகே உள்ள ஆத்தூர், சித்தேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 28 பேர் ஒருலாரியை வாடகைக்கு அமர்த்தினர்.
அதில் ஏறி நாமகிரிப்பேட்டை கோயிலுக்குச் சென்றனர்.
அங்கு சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மல்லியறை என்ற இடத்தில் லாரி அருகில் இருந்த புளிய மரத்தில்மோதியது.
இதில், ஜவுளிக் கடை உரிமையாளர் பாண்டியன் (53), சவரத் தொழிலாளி முருகேசன்(38), நாராயணன் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இவர்கள் அனைவரும் சித்தேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும் லாரியில் பயணம் செய்த 22 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தஅனைவரும் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications