மூன்றாவது அணியாக பலம் பெறும் ம.தி.மு.க
கோவை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் இரண்டு அணிகளை விட வேகமாக "பம்பரமாக சுற்றிச்சுழன்று பணியாற்றும் 3வது அணி ம.தி.மு.க தான். வைகோ, தனக்கென உரித்தானதனிப் பிரச்சாரப் பாணியில் "தம்ஸ் அப் காண்பித்து வாக்காளர் மத்தியில் பேசப்படும்கட்சியாக ம.தி.மு.கவையும் இடம் பிடிக்கச் செய்துள்ளார்.
கருணாநிதி, கழற்றி விட்டு விட்டார், பாரதிய ஜனதாவுக்கு விட்டுக் கொடுத்தாலும்,வாஜ்பாய் படத்தைப் போட தடை என அத்தனை சோதனைகளையும் முறியடித்துதமிழகத்தில் ம.தி.முக. 3 வது இடத்தைபிடித்துள்ளது.
இந்தக் கட்சிக்கு ஒரு சில இடங்கள் மிக அரிதாக கிடைக்க வாய்ப்பு இருந்தாலும்,தொண்டர்கள் சேர்ந்து போய் விடவில்லை, சோரம் போகவில்லை. வித்தியசமானஇவர்களது பிரச்சாரப் பாணி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்போது இவர்களது தேர்தல் பணியைக் கண்டு தி.மு.கவினரே, உடன்பிறப்பைஇழந்து விட்டோமே என்று எண்ணும் அளவிற்கு வித்தியசமான பாணிகளை தேர்தல்யுக்திகளாய் கையாண்டு வருகின்றனர்.
இந்த வகையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும்கிருஷ்ணசாமி, முன்னுதரணமாகத் திகழ்கிறார்.
இவர் ஏற்கனவே கோவை மாநகராட்சியின் 72வது வார்டு கவுன்சிலர். உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
மாநகராட்சி கவுன்சிலில் ம.தி.மு..க பெயர் சொல்ல இவர் மட்டுமே உள்ளார்.
கோவையின் கடைசி வார்டான இவருக்கு மாநகராட்சியில் கடைசி இருக்கை தான்.இருந்தாலும் மாநகராட்சி கவுன்சிலில் வினாத் தொடுத்தவர்களில் முதலிடத்தில்நிற்கும் இளைஞர் இவர் மட்டுமே.
எளிமையாக உள்ள இவரது செயல்பாடுகள், பெண்களிடையே கூட நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, ம.தி.முகவில் உள்ள பெண்கள், இவருக்குத்திட்டமிட்டு ஓட்டு சேகரிக்க கிளம்பியுள்ளனர்.
முழுக்க முழுக்க பெண்களே 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்துபெண்களிடையே ஓட்டுக்களை கவர்ந்து கிருஷ்ணசாமிக்கு அளிக்க முடிவு செய்துபிரச்சாரக் களத்தில் உள்ளனர்.
பெண்கள் வந்து சொன்னால், பெண்கள் கேட்கும் மனநிலை இங்குஉருவாகியிருக்கிறது.
கிருஷ்ணசாமியின் அடுத்த பிளஸ்பாயிண்ட் ரத்ததானம். யார் ரத்தம் கேட்டாலும்,ஓடோடிச் சென்று அவர்களுக்கு தனது சொந்த ரத்தத்தைக் கொடுத்து வந்துள்ளார்.
அரசியல்வாதிகளில் வித்தியசமான இவர். கவுன்சிலர் ஆன பிறகு 23 முறை ரத்தம்கொடுத்துள்ளார். இத்தகைய பொது நலமிக்க இவருக்கு ஓட்டுப் போடுங்கள் என்பதுதான் பெண்களின் வாதம்.
இவரது தொகுதிகளில் பம்பரமாகச் சுழன்று இளைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர்.வெற்றியை எட்டும் நிலையில் இல்லாவிட்டாலும், இரண்டாவது இடத்தையாவதுபிடிப்போம் என்ற நம்பிக்கை இவர்களிடையே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று தமிழகம் முழுவதிலும் பல கோணங்களில் ம.தி.மு.க. போர்தொடுத்துள்ளது. தனித்து நின்று தனித்தன்மை உணர்த்தினால், மக்கள் இம்முறைம.தி.முகவிற்கும் கணிசமான வாக்குகளை அளிப்பார்கள் என்பது இவர்களதுஎதிர்பார்ப்பு.
இரண்டு ஆட்சிகளையும் பார்த்து விட்டீர்கள், 3வது ஆட்சியாக வைகோ தலைமையில்தமிழகம் முன்னேறட்டும். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியாக திகழ எங்களுக்கும்ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள் எனக் கேட்டு வருகின்றனர். ஆனால், மற்ற இருஅணிகளின் குரல்களுக்கு இடையே இவர்களது குரல் பலம் குறைந்ததாகவே உள்ளது.
47 அமைப்புகளைக் கொண்ட 3வது அணி தமிழகத்தில் தொடங்கப்பட்டு, இப்போதுநான்காவது இடத்திற்கு அது சென்று விட்டது. இப்போது 3வது இடம்ம.தி.மு.கவிற்கு. இன்றும் ம.தி.மு.கவின் பலம் பலவீனம் "புலிகள் ஆதரவுநிலை தான்.
எது எப்படியோ, தி.மு.கவையே யோசிக்க வைத்து , ம.தி.மு.க. தன் பலத்தைஅரசியல் களத்தில் நிரூபித்து விட்டது. இது ம.தி.மு.கவிற்கு அரசியல் ரீதியான வெற்றிமட்டுமே. தேர்தல் களத்தில் அல்ல.












Click it and Unblock the Notifications